Wednesday, 13 August 2025

பதினெண் புராணங்களின் பஞ்சலட்சணங்கள்

 புராணங்களின் பஞ்ச லட்சணம் 


 மகாபுராணங்கள் பதினெட்டு. இப்பதினெட்டுப் புராணங்களுக்கும் முக்கியமான பொதுவான அம்சங்கள் ஐந்து உள்ளடங்கிருப்பதே பஞ்ச லட்சணம் எனப்படும்.

அந்த 5:-

1. சர்கா

2. பிரதி சர்கா

3. வம்ஸா

4. மன்வந்தரங்களின் தோற்றம்

5. வம்ஸானு சரிதா 

    இவற்றுள் சர்கா என்பது  பிரபஞ்ச உற்பத்தியைக்குறிப்பது.

  பிரதிசர்கா என்பது ஏற்கனவே முதலில் இருக்கும் பிரபஞ்சம் பிரளயம் எனப்படும் பேரழிவில் அழிந்து பின் மறு உற்பத்தியாவது.

  வர்ஷா எனப்படுவது சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்ததி பற்றிய பரம்பரை வரலாற்றைக் குறிப்பதாகும்.

   மன்வந்திரங்களின் தோற்றம் என்பது நிலைபெறும் கால அளவு, காலங்களை அளவிடும் முறை, இதுவரை நடைபெற்ற மன்வந்திரங்கள் என்பனவற்றைக் கூறுவதுடன் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வைவஸ்வத நடைமுறை பற்றியதாகும். 

அரச பரம்பரையின் செயல் பற்றிக் கூறுவது வம்ஸானு சரிதா ஆகும்.

  43,20,000 மனித ஆண்டுகள் கொண்டது ஒரு மகாயுகம் ஆகும். 74 மகாயுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் ஆகும்.

    ஆக, மேற்கண்ட 5 பொதுவான அம்சங்கள் பதினெண் புராணங்களில் காணப்படுவனவாகும். 


பதினெண் புராணங்களின் பஞ்சலட்சணங்கள்

  புராணங்களின் பஞ்ச லட்சணம்   மகாபுராணங்கள் பதினெட்டு. இப்பதினெட்டுப் புராணங்களுக்கும் முக்கியமான பொதுவான அம்சங்கள் ஐந்து உள்ளடங்கிருப்பதே ப...